Assimilation - இனத்தின் அடையாளத்தை கரைத்தல்

 Assimilation - இனத்தின் அடையாளத்தை கரைத்தல் 


செறிவு குறைந்த இனம் பலமான, செறிவு கூடிய இனத்துடன் கலக்கும்போது கரைந்துபோதல் (assimilation )நிகழும்.


இந்த assimilation என்பது மேற்குலக நாடுகளில், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் எவ்வித பங்கை வகிக்கின்றன என்பதை இன்னும் சிறிது விளக்கமாக புரியவைக்கவே இந்த பதிவு.


🔴முதலில் பிரித்தானியாவை எடுத்து கொள்கிறேன்.


பலகாலமாகவே பிரித்தானியா பல நாடுகளில் இருந்தும் வரும் பலதரப்பட்ட மொழி, கலாச்சார, மத பின்னணியை உடைய மக்களை உள்வாங்கி கொண்டிருக்கிறது.அவ்வாறு குடியேறியவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிரித்தானிய குடியுரிமையை பெறுகிறார்கள்.


இப்பொழுது பிரித்தானியாவிற்கு முன் இருக்கும் பெரும் சவால் எது?


ஒரு பக்கம் பிரித்தானிய நிலப்பரப்பில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும், செறிவான, பலமான உள்வாங்கும் இனமான ஆங்கிலேய மக்கள்.


மறுபக்கம் பல தரப்பட்ட இனம், மொழி, மதம், கலாச்சாரம், வாழ்வியல் பண்பாடு கொண்ட, எண்ணிக்கை அடிப்படையில் பலவீனமான, செறிவற்ற,உள்வாங்கப்படும் குடியேறுவோர் .

இதில் வரலாற்று ரீதியாகவே முரண்பாடுகளை கொண்ட கலாச்சாரம், மதம், பண்பாடு என்பவை ஒரு இடத்தில் சங்கமம் ஆகும்போது. முரண்பாடுகள் தோன்றுவது. கூர்மையடைவது இயல்பாக நிகழும்.


அதனால் முரண்பாடுகள் எழுவதை தடுக்க, ஒரு தரப்பு மற்றைய தரப்பிற்கு ஏற்றவாறு மாறுவது (adopting) அவசியமாகிறது.


உள்வாங்கிய செறிவான, மண்ணின் மைந்தர்களான ஆங்கிலேயர் குடியேறிவர்களுக்கு ஏற்ப மாறுவது சாத்தியமில்லாதது.அவசியமும் அற்றது.


தங்களது தேவைகளுக்காக பிரித்தானியாவில் குடியேறியவர்களே இங்கு இருக்கும் செறிவான ஆங்கிலேய இனத்தின் கூறுகளை உள்வாங்கி மாறவேண்டிய தேவை எழுகிறது.


இந்த மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை தொடர்ந்து குடியேறுவோர் மீது பிரயோகித்தால்தான் குடியேறுவோர் சிறிது சிறிதாக ஆங்கிலேய இனத்தின் கூறுகளை உள்வாங்குவார்கள்.


அவ்வாறு ஒரு கட்டத்தில் குடியேறியோர், ஆங்கிலேய இனத்தின் சகல கூறுகளையும் உள்வாங்கி ஆங்கிலேயராகவே மாறும்போது ஒற்றைதன்மை அடையாளம் உருவாகிவிடும். எதிர்காலத்தில் இனங்களுக்கு இடையேயான வரலாற்று முரண்பாடுகள் என்ற பிரச்சினை எழாது. ஏனெனில் ஒரு இனமாக மாறியிருக்கும்.


#இந்த நிலையை அடைவதற்கு பிரித்தானியா என்ன செய்ய முயலும்?


ஒருபக்கம் அந்த நிர்ப்பந்தத்தை மறைமுகமாக பிரித்தானியாவின் கொள்கை வகுப்பாளர்களும் முன்னெடுப்பார்கள். மறுபக்கம் இயல்பாகவே செறிவான, பலமான இனத்தின் சமூக அழுத்தமும் குடியேறியோரை மாறவைக்கும்.


பிரித்தானியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் செய்யவேண்டியது அரச கரும மொழியாகவும், தொழில் பயன்பாட்டு மொழியாகவும், வாழ்வியல் பயன்பாட்டு மொழியாகவும் தொடர்ந்து ஆங்கிலத்தை மட்டுமே தக்கவைப்பதுதான்.


வேரோடு நேரடி தொடர்புள்ள என்னை போன்ற முதல் தலைமுறை குடியேறியோர் மட்டுமே வீரியமாக தங்களது தனித்த அடையாளங்களை தக்கவைக்க முயல்வார்கள். அடுத்த தலைமுறையான எனது பிள்ளைகளுக்கு எனது தாய் மொழி தமிழை கடத்துவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. பெற்றோர்களின் கட்டாயத்திற்காக பிள்ளைகள் தாய்மொழியை கற்பார்கள். ஆனால் அந்த தாய்மொழியில் தேர்ச்சி இருக்காது.


ஒரு மொழி தொழில் பயன்பாட்டு மொழியாகவும், வாழ்வியல் பயன்பாட்டு மொழியாகவும் இல்லாத போது அதை கற்பதற்கான அவசியம் இல்லாமல் போய்விடும். அதனால் இரண்டாம் தலைமுறை இயல்பாகவே ஆங்கிலத்தை தனக்கான மொழியாக உள்வாங்கியிருப்பார்கள். அவர்களின் கலை, இசை, இலக்கியம், வாசிப்பு, வாழ்வியல் பண்பாடு எல்லாம் ஆங்கிலத்தினுடாகவே நடக்கும்.


மூன்றாம் தலைமுறையான அவர்களின் பிள்ளைகளுக்கு, அவர்கள் முதல் தலைமுறையின் தாய் மொழியை கடத்துதல் போன்ற வேலையை செய்யபோவது இல்லை. அந்த மூன்றாம் தலைமுறை இயல்பாகவே ஆங்கிலத்தினூடாக சகலவற்றையும் அணுகும்.


குடியேறியோரில் வெள்ளை தோல் அற்றவர்களுக்கு இன்னொரு பிரச்சினை உண்டு. அது நிறம். காலவோட்டத்தில் வெள்ளை நிறம் கொண்டவர்களோடு திருமணம், உறவுகள் என கலக்கும்போது அந்த நிறமும் மாறிவிடும்.


*மேலே நான் விவரித்ததுதான் assimilation.


இதில் இரு வகையான அழுத்தம் பிரயோகிக்கப்படும்.


1)அரசு இறுக்கமாக மண்ணின் மொழியை அரசின் உத்தியோகபூர்வ. தொழில் பயன்பாட்டு வாழ்வியல் பயன்பாட்டு மொழியாக தொடர்ச்சியாக வைத்திருப்பது.


2)செறிவான, பலமான உள்வாங்கும் இனத்தின் சமூக அழுத்தம்.


இந்த assimilation ஐ தியரியாக பின்வருமாறு சுருக்கமாக விளக்கலாம்.


The most common cultural change when two cultures compete is assimilation of the minority culture into the majority culture. The minority culture gradually loses all of the markers that set it apart as a separate culture in the first place. Markers include things like languages, food, and customs. Eventually, the minority culture becomes almost indistinguishable from the majority culture.


#இந்த assimilation ஐ மனித வரலாறு நெடுக காணலாம்.


1.முதலாவது உணரமுடியாத வகையில், மென்மையாக, மெதுவாக அரசுகள் இந்த assimilation ஐ நடைமுறைப்படுத்துவது ஒரு வகை.


மேலேயுள்ள பிரித்தானியா, மற்றைய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, இலங்கை என செய்வதெல்லாம் இந்த வகைதான். ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இதை வேறொரு பெயரில் அழைப்பார்கள்.


2. இரண்டாவது வெளிப்படையாக கடுமையான முறையில் assimilation நடைமுறைப்படுத்துவது. இது Forced assimilation என அழைக்கப்படும்.


உதாரணமாக கனடா, Canadian Indian residential school system என்ற திட்டத்தினூடாக நூறு வருடங்களாக, அதாவது 1990 கள் வரை, அந்த நாட்டின் பூர்வீக குடிகளை வலுக்கட்டாயமாக assimilate செய்தது(Forced assimilation of Indigenous peoples)


The school system was created for the purpose of removing Indigenous children from the influence of their own culture and assimilating them into the dominant Canadian culture, "to kill the Indian in the child."


அமெரிக்காவும் 19 நூற்றாண்டின் ஆரம்பங்களில், இதே நடைமுறையினூடாக பூர்வீக குடிகளான native Indians ஐ forced assimilation இற்கு உட்படுத்தியது. அவுஸ்திரேலியாவும் அதனது பூர்வீக குடிகளான aborigines ஐ forced assimilation இற்கு உட்படுத்தியது.


#Integration அரசுகள் மென்மையாக assimilation ஐ நடைமுறைப்படுத்தும் போதும். அவற்றை வெளிப்படையாக ஒப்புகொள்வதில்லை. அதை Integration என்று சாமர்த்தியமாக அழைக்கிறார்கள்.


அது என்ன Integration?


உள்வாங்கப்பட்ட பலவீனமான இனம், செறிவான இனத்திற்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கினாலும், அது தனது தனித்த அடையாளங்களை தொடர்ந்து தக்க வைத்துகொள்ளும். உள்வாங்கிய செறிவான, பலமான இனமும் பலவீனமான இனத்தின் தனித்த அடையாளங்களை ஏற்றுகொள்ளும்.


integration suggests boundaries. It is defined in terms of equality. But in this context equality indicates that a host is obligated to embrace foreign cultures as equal, even when they conflict with the values and traditions of the host.


நீங்கள் கூர்ந்து அவதானித்தீர்களேயானால், மேற்குலக நாடுகளின் அரசுகள் இந்த integration, multiculturalism போன்ற சொல்லாடல்களை அதிகம் உபயோகப்படுத்தும். ஆனால் இவை தொலைநோக்கு பார்வையில், assimilation ஐ நடைமுறைபடுத்தவே விரும்புகின்றன. காரணம் உள்வாங்கும் செறிவான இனத்தின் வரலாற்று அடையாளத்தை தக்கவைக்க வேண்டிய தேவையும், புதிதாக உள்வாங்கப்படும்  பலவீனமான இனத்தினால் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவையும் இருக்கின்றது.


இது உள்வாங்கும் செறிவான இனம், உள்வாங்கப்படும் பலவீனமான குடியேறுவோர் இடையே முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அணுகுமுறையாக மேற்குலக நாடுகளால் கடைபிடிக்கப்படுவது.


🔴இந்தியா, இலங்கை


அடுத்து இந்தியா. இந்தியாவை எடுத்துகொண்டால், மேலே சொன்ன உள்வாங்கும் செறிவான இனம், உள்வாங்கப்படும் பலவீனமான இனம் என இன்று இல்லை.


வெளியில் இருந்து வந்ததாக கூறப்படும் ஆரியர் நுழைந்தே. குறைந்தது 3500 வருடங்களாவது இருக்கும். அதனால் இன்றைய தேதியில் ஆரியருக்கு முன்பிருந்தவர்களும் பூர்வீக குடிகள்தான். ஆரியரும் பூர்வீக குடிதான். 3500 வருடம் இருந்தவர்களை இனி பூர்வீக குடிகள் அல்ல என சொல்வது வரலாற்று பார்வையில் நகைப்புக்கு உரியதே.


ஆனால் இரண்டு தரப்புமே பூர்வீக குடிகள்தான் என்றாலும், இங்கு முரண்பாடுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன. அத்துடன் இரண்டு தரப்பு என்று சொல்வது கூட மேலோட்டமான பொதுமைப்படுத்தல்தான். அது பலதரப்பட்ட மொழி வாழ்வியல் பண்பாடு என பல இனங்களாக இருக்கின்றன.


இந்த பல இனங்கள் வரலாற்று முரண்களை கொண்டதாகவும், அவை கூர்மையுடையதாகவும் இருக்கின்றன. காரணம் இன்றைய இந்தியா பிரிட்டிஷாரால் செயற்கையாக ஒட்ட வைத்து, தைக்கப்பட்டது. இங்கு ஒரு இனம் அதனது மேலாண்மையை மற்றைய இனங்கள் மீது நிறுவ முயலும்.


#இப்போது, நீங்கள் அரசியல் அதிகாரம் உடைய, இந்திய ஒன்றியத்தின் கொள்கை வகுப்பாளராக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முன்னே இருக்கும் சவால் என்ன?'


உங்கள் முன்னே பல இனங்கள். அவை ஒவ்வொன்றும் தனித்துவமான மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றை கொண்டுள்ளன. இவை தொடர்ந்து இருக்கும்போது, எதிர்காலத்தில் ஒரு முரண்பாடு தோன்றுவதற்கான சாத்தியம் கட்டாயம் உண்டு. அத்துடன் உங்கள் இனத்தின் மேலாண்மையையும் உறுதி செய்ய விரும்புகிறீர்கள்.


இந்த முரண்பாடு உருவாவதை தவிர்க்க, இனங்களின் தனித்துவத்தை கரைக்கும் உத்தியை கையாள்வீர்கள். அதன்மூலம் எல்லா இனங்களையும் ஏதோ ஒன்றின் மூலம் ஒற்றைதன்மை கொண்டுவர முயல்வீர்கள். அந்த உத்திதான் assimilation.


அந்த ஏதோ ஒன்று அநேகமான சந்தர்ப்பங்களில் மொழியாக இருக்கும். அந்த ஒற்றை மொழியை அரச கரும, தொழில் பயன்பாட்டு மொழி, வாழ்வியல் பயன்பாட்டு மொழியாக மாற்ற முயற்சிகள் நடக்கும். மற்றைய மொழிகள் தொழில் பயன்பாடு இன்றி, அரச கரும அங்கீகாரம் இன்றி செயலிழக்க ஆரம்பிக்கும்.


இது நடக்க குறைந்தது நூறு வருடங்கள் ஆகும். ஆனால் அதுவரை பொறுத்திருக்க கொள்கை வகுப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். காரணம் இந்த assimilation இற்கு பிறகு தங்களது இனத்தின் மேலாண்மையை உறுதி செய்திருப்பார்கள். இது தேவர் மகன் விதை நான் போட்டது வகைதான்.


இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த assimilation ஐ தான் செய்துவந்தது. உண்மையிலேயே காங்கிரஸ்தான், சாமர்த்தியமாக. வெளியில் தெரியாத வண்ணம், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இந்த assimilation


நடைமுறைப்படுத்தியது. பாஜக இந்த வேகத்தை கூட்ட முனைந்ததால், எல்லோருக்கும் தெரியும்படி ஆயிற்று. அவ்வளவுதான். இந்த assimilation ஐ இந்திய ஒன்றியம் நிறுத்தாது. என்னுடைய பார்வையில் அவர்கள் 60% வெற்றியடைந்து இருப்பதாகவே உணர்கிறேன்.


இலங்கையும் இந்த assimilation ஐ தான் செய்ய முயன்றது. இது விடுதலை புலிகளினால் 30 வருடமாக தடுத்து நிறுத்தப்பட்டது. போரின் முடிவுக்கு பின்பு, இலங்கை மீண்டும் assimilation ஐ ஆரம்பித்துள்ளது.


இந்த ஆட்டத்தை புரிந்து கொண்டு, இதிலிருந்து விடுபட்டு தனக்கான தனித்துவமான அடையாளத்தை தக்கவைக்க விரும்பும் இனம் மட்டும் இந்த assimilation பொறியில் இருந்து தப்பிக்கும். மற்றையவை கரைந்து போவது தவிர்க்கமுடியாதது.

Source : முகநூல் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்